உத்தரகாண்டில், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்டில், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.

இது சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதை அடுத்து, கேதார்நாத் கோவில் இந்த மாதம் 3-ந்தேதி பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத்துக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று, காணாமல் போனது. இன்று அதிகாலை குப்தகாஷிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானது. அதில் விமானி 5 பெரியவர்கள் மற்றும் 1 குழந்தை என ஆறு பயணிகள் இருந்தனர்.

அந்த பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், ஹெலிகாப்டர் வழி தவறி சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ந்தேதி நடந்த விமான விபத்தில், 274 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *