கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்சேதி அனுப்பிய விவகாரம் முதலமைச்சர் விஜயின் கவனத்தில் உள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறைச் செயலாளர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் விவகாரம் முதலமைச்சர் விஜயின் கவனத்தில் உள்ளதாகவும், அது உண்மையாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி பேசியது பற்றித் தான் கருத்துக் கூற விரும்பவில்லை என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.


