NEET: ஜீரோ மார்க் போதும்!

நீட் தேர்வில் நெகடிவ் மதிப்பெண் உண்டு. ஜீரோ பெர்சண்டைல் என்பது ஜீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். கடைசி மதிப்பெண் என்பது நெகடிவ் ஆக இருந்தாலும் அது ஜீரோ பெர்சண்டில் என்பது வலைதளங்களில் பதிவிடுகின்றனர்…

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் நெகடிவ் அதைவிடக் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும், மருத்துவ மேற்படிப்பில் சேரலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்தாலும் வந்தது, எதிர் கட்சிகள் குறிப்பாகத் தமிழ் நாட்டில் எதிர்மறையான கருத்துக்களை அள்ளித் தெளித்து, மக்களிடம் தவறான மாயையை உருவாக்கி வருகின்றனர்.

அதாவது தமிழக முதலமைச்சர், தனது எக்ஸ் பதிவில் பாஜக அரசு நீட் தேர்வின் பலன் வெறும் பூஜ்ஜியம் என்பதை ஒத்துக்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டு உள்ளார். இதற்குத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். பெர்செண்டேஜ் என்பதற்கும் பெசெண்டைல் என்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு.

பெர்செண்டேஜ் ஏன்பது நூற்றுக்கு எத்தனை என்பது. உதாரணமாக 100 மதிப்பெண் தேர்வில் 60 பெர்செண்டேஜ் என்பது 60 மதிப்பெண்கள். எத்தனை பேர் எழுதினாலும் மாறாது. பெர்செண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி எடுத்து அதில் ஒரு இடத்தைக் குறிப்பது.

அதாவது ஒரு தேர்வில் 9 மாணவர்களின் மதிப்பெண்கள் 89,90,91,92,93,94,95,96,97,98,99, இதில் 50-ஆவது பெர்செண்டைல் 92 ஆகும். அதே போலக் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருப்பின் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களிலேயே குறைந்ததாக, அதாவது ஜீரோ மதிப்பெண் மற்றும் அதற்கும் குறைவாகக் கடைசி நெகடிவ் மதிப்பெண்கள் கூட எடுத்திருக்கும் மாணவர்கள் கூட முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்பதே இதன் பொருள்.

ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகளோ மோடி அறிவித்த ஜீரோ பெர்சென்டைல் எனக் குறிப்பிடாமல் ஜீரோ மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட் என்று கிண்டலடித்து வருகிறது. இப்போது அறிவித்த ஜீரோ பெர்செண்டைல் நீட் தேர்வு எழுதி, தகுதி பெற்று ஐந்து வருடங்கள் எம்பிபிஎஸ் இளநிலை முடித்து, முதுகலைக்கான நீட் தேர்சுக்குத் தான் இந்த அறிவிப்பு, மற்றும் சலுகை பொருந்தும்.

அது தவிர பிளஸ் 2 தேர்வு முடித்தவர்கள் எழுதும் நீட் தேர்வுக்கு ஜீரோ மதிப்பெண் எடுத்தால் போதும் என்பது பொருந்தாது. இளநிலை சேர்வதற்கு கண்டிப்பாகத் தகுதித் தேர்வில் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும். ஆனால் குட்டையைக் குழப்புவது போல் அன்றிலிருந்து இன்றுவரை தாங்கள் குழம்புவது மட்டுமல்லாது மாணவர்களைக் குழப்புவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *