ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது, பால் விலை உயர்ந்துள்ளது என்றும், இன்னும் நான்கு மாதங்களில் தமிழகத்தில் குடிப்பதற்குக்கூட பால் கிடைக்காது, குழந்தைகளுக்கும் பால் கிடைக்காது. இதுதான் த.வெ.க.ஆட்சியின் நிர்வாக திறமை என்று கோவையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மதுராந்தகத்தில் ஏற்கனவே பிரச்சாரம் செய்துவிட்டு வந்துள்ளேன். அங்கு அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும் எனவும், தாராபுரத்தில் இருந்து வரக்கூடிய செய்திகள் நல்ல செய்திகளாகவே உள்ளன எனவும்,
மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என நயினார்-நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், பா.ஜ.க.வின் கிளையாக தி.மு.க. மாறிவிட்டதாக, தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் ஜோசப்விஜய் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
முதலமைச்சரின் பேச்சில் தடுமாற்றம் தெரிகிறது எனவும், எதை எவ்வாறு கூற வேண்டும் என்பதே தெரியவில்லை எனவும், தடுமாற்றம்தான் பெரிய மாற்றமாக அவருக்கு அமையும் என்றும் தெரிவித்தார். மேலும், இதைச் செய்துள்ளோம், அதைச் செய்துள்ளோம் என்று த.வெ.க. வினர் பட்டியல் போடுகின்றனர்.
ஆனால் மகளிருக்கு 2-ஆயிழரம் 500 ரூபாய் வழங்கப்பட்டதா, அனைத்து மாநில முதலமைச்சர்களும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கோப்புகளில் கையெழுத்திடுவார்கள். தமிழகத்தின் முதலமைச்சராகிய நீங்கள் எந்தக் கோப்பில் கையெழுத்திட்டீர்கள், நீங்கள் என்னதான் செய்துள்ளீர்கள் என்று நயினார்நாகேந்திரன் கேள்விகளை எழுப்பினார்.


