Advertisements

பேச்சுவார்த்தைகள் முடியும் வரை முழுமையான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் தொடர்பாகக் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அவருடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்ததோடு, முழுமையான போர்நிறுத்தத்திற்கும் தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
தங்களுக்கிடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என உக்ரைன் நம்புவதாகக் கூறினார். பேச்சுவார்த்தைகள் முடியும் வரை முழுமையான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
Advertisements




