அண்ணாமலையின் புதிய கட்சி – இன்று நண்பகல் 12 மணிக்கு அறிவிப்பு!

புதிய கட்சி தொடங்குவது பற்றி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
பா.ஜ.க.வில் இருந்து விலகிய அண்ணாமலை, தனிக்கட்சி ஒன்றை புதிதாக தொடங்க இருப்பதாகவும், அது மதசார்பற்ற கொள்கை கொண்ட கட்சியாகவும், முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தியே அந்த கட்சி செயல்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதுதொடர்பாக, அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில், இன்று நண்பகல் 12 மணிக்கு, உங்கள் அனைவருடனும் சமூக ஊடகங்கள் வாயிலாக உரையாடவும், தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த அதிரடி அறிவிப்பின் மூலம், பரபரப்பிற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சம் இல்லாத ஒரு விறுவிறுப்பான அரசியல் களமாகத் தமிழ்நாடு திகழப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *