மனிதநேயத்தைப் போற்றும் விருதுகள்..!

கோவையில் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளை கவுரவிக்கும் விதமாக தனியார் அமைப்பு சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது

கோவை தனியார் மருத்துவமனை வளாகத்தில், தனியார் அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தனியார் இயக்கத்தின் நிறுவனரும் நோபல் பரிசு பெற்றவருமான கைலாஷ் சத்யார்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும்,குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடும், தனியார் அமைப்பின் இணை நிறுவனர் சுனிதா கிருஷ்ணனுக்கும், தொழில் வளர்ச்சியை ஊக்குவித்ததற்காக தனியார் குழுமத்தின் தலைவர் ராமசாமிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விருதுகளை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தனியார் அமைப்பின் தலைவர் மைக் முரளிதரன் பேசியபோது, அவசர காலங்களில் எவ்வாறு செயல்பட்டு விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவது என்பது குறித்து மக்களுக்குப் பயிற்சி அளிப்பதே தங்களின் நோக்கம் என்றார்.

விருது பெற்றவர்கள் குறித்து  நிறுவன அறங்காவலர் கலா பாலசுந்தரம் பேசியபோது, “இவ்விருதுகள் மனிதநேயத்தின் சிறப்பான உணர்விற்கான ஒரு எடுத்துக்காட்டாகும் என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *