மாணவிகளுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்!

Advertisements

கிழக்கு தாம்பரத்தில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு, அமைச்சர் சரத்குமார் பாடநூல்களையும்  சீருடைகளையும் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாடநூல் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், கோடை விடுமுறைக்கு பிறகு வருகைத் தந்த மாணவிகளுக்கு  சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் சரத்குமார் மாணவர்களுடன் அமர்ந்து பள்ளியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார். இதன் பின்னர், பள்ளிக்கு அடிக்கடி வந்து ஆய்வு மேற்கொள்வேன் என்று உறுதி அளித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *