Philippines:வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து – 11 பேர் பலி!

Advertisements

வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் சீனாடவுன் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகக் கட்டிடத்தில் இன்று காலைப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தில் பற்றிய தீ மளமளவெனக் கட்டிடத்தின் மேல் பகுதிக்கும் பரவியது.இந்தத் தீ விபத்துகுறித்து தகவலறிந்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பற்றி எரிந்த தீயை அணைந்தனர். ஆனாலும், இந்தத் தீ விபத்தில் கட்டிடத்தின் 11 பேர் உயிரிழந்தனர். இந்தத் தீ விபத்துக்கான காரணம்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *