YERCAUD : இந்திய அளவிலான கராத்தே, குங்பூ, மோகா போட்டிகளில், சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மாணவி

Advertisements

ஏற்காட்டில் நடைபெற்ற இந்தியா அளவிலான கராத்தே, குங்பூ, மோகா போட்டிகளில், காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சியை சேர்ந்த மாணவி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். சேலம் மாவட்டம் ஏற்காட்டில், இந்தியா அளவிலான கராத்தே, குங்பூ, மோகா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. போட்டியில்,  தமிழ்நாடு, ஆந்திர, கேரளா, கர்நாடக, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 6-வயதுடைய  சப் ஜூனியர்கள்,  30-வயதுடைய ஜூனியர்கள்  பங்கேற்றனர்.

மேலும்,  காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சியில் கராத்தே பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 25-பேரை,  கரேத்தே பயிற்சியாளர் செல்வகுமார், ஏற்காட்டில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பங்கேற்பதற்காக அழைத்துச் சென்றார். அங்கு நடைபெற்ற கராத்தே போட்டியில், கேரளா அணியுடன் போட்டியிட்ட, பண்ருட்டி ஊராட்சிய சேர்ந்த அரசு கல்லூரி மாணவி மோனிகாஸ்ரீ, சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொண்ட மற்ற மாணவர்களும் வெற்றிப் பெற்று, பட்டம், பதக்கங்களை வென்று தங்களது சொந்த ஊருக்கு வந்தனர். அவர்களை பெற்றோர்கள் சக மாணவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இது குறித்து, மாணவி மோனிகாஸ்ரீ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த பள்ளி மாணவர்களை, தேசிய அளவில் ஏற்காட்டில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பங்கேற்க, எங்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் செல்வகுமார், தனது செந்த செலவில் அழைத்துச் சென்றார் எனவும், எங்களைப்போன்று கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு, தமிழக அரசு பொருளாதார நிதியை வழங்கினால், நாங்கள் அனைவரும் உலகளவில் நடைபெறும் கராத்தே, குங்பூ,மோகா, போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கு பெருமை சேர்போம் என்றும்  மாணவி மோனிகாஸ்ரீ தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *