Madhya Pradesh: பிச்சை எடுத்து 45 நாட்களில் ரூ. 2.5 லட்சம் சம்பாதித்த பெண்!

Advertisements

போபால்: மத்தியபிரதேசத்தில் குழந்தைகளைப் பிச்சை எடுக்க வற்புறுத்தி, 45 நாட்களில் ரூ. 2.5 லட்சத்தைப் பெண் ஒருவர் சம்பாதித்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ஏராளமான பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை தனது முழு நேர வேலையாக வைத்துள்ளனர். இங்குச் சுமார் 7 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருக்கின்றனர். இதில் 50 சதவீதம் குழந்தைகள் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தூரில் பஸ் ஸ்டாண்டில் ஒரு பெண் 7 வயது மதிக்கத் தக்க குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவரது பெயர், இந்திராபாய் என்பதும் 7 வயது குழந்தை அவருடைய மகள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்திராபாயை மத்திய பிரதேச போலீசார் போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்திராபாய்க்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். 2 முதல் 10 வயதுக்கு உள்பட்டவர்கள். அவர்களையும் பிச்சை எடுக்க வைத்துச் சம்பாதித்து வந்திருக்கிறார். வெறும் 45 நாட்களில் ரூ. 2.5 லட்சத்தைச் சம்பாதித்துள்ளார். இதில் 1 லட்சத்தைத் தனது மாமியாருக்கு அனுப்பி உள்ளார். 50 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். 50 ஆயிரத்தை வைப்பு நிதியில் போட்டுள்ளார். மீதியை செலவழித்துள்ளார்.

இந்திராபாய்க்கு ராஜஸ்தானில் 2 மாடி வீடும், விவசாய நிலமும் உள்ளன. அவருடைய கணவர், மோட்டார் சைக்கிள் வைத்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. பிச்சை எடுத்து அதிக பணத்தை சம்பாதித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *