அனைவருக்கும் அன்பு கொடுக்கக்கூடிய நபர் நீங்கள்தான் என்று அண்ணாமலை புகழாரம்..!

Advertisements

நான் சார்ந்து இருக்கக்கூடிய பா.ஜ.க.வின் மோடி அய்யாவாக இருக்கட்டும், கலைஞர் அய்யாவாகட்டும்,ஸ்டாலின் ஐயா வாகட்டும், அனைவருக்கும் அன்பு கொடுக்கக்கூடிய நபர் நீங்கள்தான் என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு அண்ணாமலை புகழாரம் சூட்டினார்.

கோவை அருகே தனியார் ரியல் எஸ்டேட் வளாகத்தில் நடத்தப்பட்ட இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று, இசை மேடையில் இளையராஜா காலில் விழுந்து வணங்கி அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அதன் பின்னர்,விழா மேடையில் பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

அப்போது, என்னை பெறுத்தவரை, இசைக்கடவுள் இளையராஜாவுடன் நாம் இருக்கிறோம் என்றும், நாம் எல்லோம், எல்லாவற்றையும் மறந்து, வணிர்களாக, இசை பிரியர்களாக இங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்றும், ஐயாவின் இசையை தொடர்ச்சயாக நாம் கேட்க வேண்டும் என்றால், 17-ஆண்டுகள் வேண்டும் என்றும், 49-ஆண்டுகளில் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் என்றும், இந்தியாவின் பெருமையாக ஆசியாவை சார்ந்த நபர், சிம்பொனியை லண்டனில் இசைத்துள்ளார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *