Yashwant Guruji: அடுத்த பிரதமர் பெண் ஒருவர் வருவார்.. பிரபல ஜோதிடர் கணிப்பு!

இம்முறையும் மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வரும். நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராவாரென, பல கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இந்நிலையில், ‘அடுத்து பெண் தலைவி ஒருவர் பிரதமராக வருவார்’ என, துமகூரு, திப்டூர், நொனவினகெரேவின் யஷ்வந்த் குருஜி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இம்முறை ஒரே கட்சி, சொந்த பலத்துடன் மத்தியில் ஆட்சியில் அமர முடியாது. தொங்கு லோக்சபா அமையும். மற்ற கட்சிகளுடன் ஒரு கட்சி, கூட்டணி அரசு அமைக்கும். நாட்டுக்கு, பெண் பிரதமர் கிடைப்பார்.

அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தராக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்திராவுக்கு பின், நாட்டுக்கு மற்றொரு பெண் பிரதமர் கிடைப்பார். சிவராத்திரிக்கு முன், தேர்தல் நடந்திருந்தால் நரேந்திர மோடிக்கு, மீண்டும் பிரதமராகும் யோகம் இருந்தது. ஆனால், அந்த யோகம் இப்போது அவருக்கு இல்லை. பெண்ணுக்கே அந்த யோகம் வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன், யஷ்வந்த் குருஜி, ‘கர்நாடகாவில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி, காங்கிரஸ் ஆட்சி அமையும்; தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்’ என ஆருடம் கூறியிருந்தார். அது நிஜமானது.

அதற்கு முன் கொரோனா குறித்தும், அவர் கூறிய ஆருடம் பலித்தது. எனவே, அவரது தற்போதைய ஆரூடமும் பலிக்கும் என, அவரது மடத்தின் பக்தர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *