
ஒண்டிவீரனின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமுக வலைதளத்தில் அவரது நினைவுகளை பதிவிட்டுள்ளார்.

ஒண்டிவீரனின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமுக வலைதளத்தில் அவரது நினைவுகளை பதிவுட்டுள்ளார். இதில், ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து,அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளில் அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், சிப்பாய்ப் புரட்சிக்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென்தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத்தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என்றும் கூறியுள்ளார்.



