Oscars 2024: ஆஸ்கர் மேடையில் ஒலித்த நாட்டு நாட்டு பாடல்… பறந்த கைதட்டல்கள்!

Advertisements

ஆஸ்கர் மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடப்பட்டது.

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் 95 ஆவது ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

திட்டமிட்டபடி, ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அசல் பாடகர்களான ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் காலபைரவா இந்தப் பாடலை மேடையில் பாடினர். அவர்கள் ஒரு பக்கம் பாடலைப் பாடிக்கொண்டிருக்க மறுபுறம் நடனக் கலைஞர்கள் மேடையில் ஸ்டெப்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.

நாட்டு நாட்டு பாடலில் வரும் காட்சிகளும், நடனும், ஆடையும் அணிந்து நடனமாடி அசத்தினர். இந்தப் பாடலின் உண்டான தனித்துவமான ஸ்டெப்ஸ் பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் விளைவாகப் பார்வையாளர்கள் நாட்டு நாட்டு பாடல் நடனம் முடிந்தவுடன் எழுந்து நின்று ரசித்து, கைத்தட்டினார்.

இந்த வீடியோவை ஆர்.ஆர்.ஆர் குழுவினர் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் ஏற்கனவே கலந்து கொண்டு உள்ளனர். இந்த விழாவில், ராஜமௌலி, என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் ஷெர்வானி அணிந்து கலந்து கொண்டனர்.

ராம் சரண் மற்றும் ராஜமௌலி கருப்பு உடையில் ஜொலித்தனர். குறிப்பாக, என்டிஆர் தனது தோளில் புலி உருவம் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஷெர்வானியை அணிந்திருந்தார். சிவப்பு கம்பளத்தில் நிதானமாக அவர்கள் நடந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *