திமுகவை விட்டு தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்த முடிவு, தேசிய அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணி என்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் எடுத்த கூட்டணி மாற்ற முடிவு தற்போது தேசிய அரசியலிலும் கட்சிக்கு புதிய சவாலாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த திமுகவுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்த காங்கிரஸ், ஆட்சியை அமைத்த விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் உடனடியாக கைகோர்த்தது. இந்த அரசியல் மாற்றம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், அகில இந்திய காங்கிரஸ் தலைமையிலும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த திடீர் அரசியல் நகர்வின் பலனாக, முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கிடைத்தன. சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக ஆட்சியில் காங்கிரஸ் மீண்டும் பங்குபெற்றது கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த கூட்டணி மாற்றம் டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் கலவையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
டெல்லி அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, இந்த கூட்டணி மாற்ற முடிவில் மூத்த தலைவர் சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் இரண்டு அமைச்சர் பதவிகள் என்ற உடனடி அரசியல் பலனுக்காக, அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியின் முக்கிய தூணாக இருந்த திமுகவுடனான நம்பிக்கை உறவை காங்கிரஸ் பாதித்துக்கொண்டதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், இந்த அரசியல் மாற்றம் இந்தியா கூட்டணியில் உள்ள பிற முக்கிய கூட்டணிக் கட்சிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் காங்கிரஸ் மேலிடத்தில் நிலவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களின் நம்பிக்கையிலும் இதன் தாக்கம் பிரதிபலிக்கலாம் என்பதே சோனியா காந்தியின் முக்கிய கவலையாக இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைமைக்கு நீண்டகாலமாக இருந்து வந்த அரசியல் மற்றும் தனிப்பட்ட நல்லுறவை முறித்துக்கொண்டு, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்தது டெல்லி மேலிடத்தின் அவசர அரசியல் முடிவு என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் உள்கட்சியில் கருத்து தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ், பிஆர்எஸ் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கட்சிகள், சிஜேபி (CJP) தலைமையில் உருவாகும் எனக் கூறப்படும் புதிய கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக முக்கியமாக, இந்த 3வது அணியில் காங்கிரஸை முற்றிலும் புறக்கணிக்க அனைத்து மாநிலக் கட்சிகளும் முடிவெடுத்துள்ளன.
தமிழகத்தில் கிடைச்ச கொஞ்சம் அதிகாரத்துக்காக, தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரா உருவாகப் போன பெரிய கூட்டணிலிருந்து காங்கிரஸ் தன்னாலே தனியா நிக்குற நிலைக்கு வந்துடுச்சு. வரப்போகும் லோக்சபா தேர்தலில் CJP – திமுக கூட்டணி இளைஞர்களின் பெரிய ஆதரவோட களமிறங்கும். அதே நேரத்தில் தவெக – காங்கிரஸ் கூட்டணி கடினமான அரசியல் சவால்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
தவெகவுடன் இணைந்து பெற்ற இரண்டு அமைச்சர் பதவிகள், காங்கிரஸுக்கு அரசியல் லாபத்தைவிட நீண்டகால இழப்பையே ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வெறும் இரண்டு அமைச்சர் பதவிக்காக எடுத்த இந்த அரசியல் முடிவு, காங்கிரஸின் மாநில அரசியல் எதிர்காலத்தையும், தேசிய அரசியல் நிலைப்பாட்டையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.


