வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ. 2 கோடியே 20 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் திட்டப் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்.
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட கொம்பாக்கம் வார்டில் கோதண்டபாணி நகர், யோகவா நகர், ஈஸ்வர் நகர் பகுதிகளுக்குப் புதுச்சேரி நகாரட்சி மூலம் ரூ. 19 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி, செட்டிக்களம், துர்கா நகர் பகுதியில் ரூ. 17 லட்சம் மதிப்பில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி, பாப்பாஞ்சாவடி சப்தகிரி கார்டன் பகுதியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி, பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம்மூலம் ஒட்டாம்பாளையம் கர்மவீரர் காமராஜர் குடியிருப்பு பகுதியில் ரூ. 14 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, மின்துறை மூலம் ரூ. 23 லட்சம் செலவில் செட்டிக்களம் மற்றும் கொம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் பணி மற்றும் கொம்பாக்கம் அய்யனார் கோவில் முதல் செட்டிக்களம் ரோடு கடைசி வரை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவுமூலம் ரூ. 1 கோடியே 40 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணியென மொத்தம் ரூ. 2 கோடியே 20 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, தார்ச்சாலை அமைக்கும் பணி, மின்மாற்றி இயக்கி வைக்கும் பணி மற்றும் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன், பொதுப்பணித்துறை மத்திய கோட்ட செயற்பொறியாளர் திருஞானம், இளநிலைப் பொறியாளர் முருகேசன், மின்துறை உதவிப் பொறியாளர் செல்வபாண்டி, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைப் பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவிப் பொறியாளர் மோகன்ராஜ் மற்றும் ஊர் முக்கியதஸ்ர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
