Yashika Aannand: ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்த டிரஸ்!

ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்த யாஷிகா ஆனந்த்!

நடிகை யாஷிகா ஆனந்த் புது டெல்லியில் பிறந்து, சென்னையில் வளர்ந்த பெண். சிறு வயது முதலையே மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்த யாஷிகா ஆனந்த், கடந்த 2016ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.


தமிழ் மொழி அல்லாது பிற மொழிகளில் இவர் இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இவர் ஒரு சில படங்களில் நடிக்கத் தேர்வானார்.

அந்தச் சூழ்நிலையில் தான் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி மகாபலிபுரம் அருகே நடந்த ஒரு கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் அவருடைய தோழி ஒருவர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், அடிக்கடி கூடுதலான கிளாமரை வெளிப்படுத்தும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில்  புதுவிதமான டிரஸ் போட்டுத்தூக்கலான கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *