
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் அமெரிக்க அணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் அமெரிக்க அணி இந்திய அணியுடன் மோதியது. இப்போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, உலகக் கோப்பையில் விளையாடி வரும் அமெரிக்க அணிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது சமூக வலைப்பதிவில்,இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் அமெரிக்க அணிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அமெரிக்க கிரிக்கெட் அணி வலுவாக இருக்கிறது என்றும் உங்கள் வெற்றிக்காக அமெரிக்கா காத்திருக்கிறது என்றும் கூறினார்.


