UNFPA: நீண்ட ஆயுளோடு வாழும் பெண்கள்!

Advertisements

இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலங்களில் வாழும் பெண்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதாகச் சமீபத்தில் ஆய்வு செய்த யுஎன்எஃப்பிஏ அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் படி இந்தியாவில் சில மாநிலங்களில்  ஆண்களைவிடப் பெண்களே நீண்ட ஆயுளோடு உயிர் வாழ்வதாகத் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், உத்தர்கண்ட், கேரளா, ஹிமாச்சல் பிரதேசம், மற்ரும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 60 வயதைக் கடந்து 20 வருடங்கள்வரை பெண்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வதாகத் தெரிவித்துள்ளது.

முதியோர் கணக்கெடுப்பு யுஎன்எஃப்பிஏ அமைப்பு நடத்தியதில் 2023 -ஆம் ஆண்டு நிலவரப்படி சுத்தமான காற்று, சுகாதாரமான சூழல், சத்தான உணவு உட்கொள்ளும்  60 வயதைக் கடந்த பெண்கள்18.3 வருடங்கள் வரையிலும், ஆண்கள் 17.5 வருடங்கள் உயிர் வாழ்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

2050 -ல் 20 சதவீதம் முதியோர்கள், மொத்த மக்கள் தொகையில் அதிகமாக வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது. உலக அளவில் ஒப்பிட்டால் 2.1 பில்லியன்அதிகரிக்கலாமெனத்தெரிவித்துள்ளது. இந்தியாவைப்பொறுத்தமட்டில் 149 மில்லியன் மக்கள் தொகையில் 2022-ல் 10.5 சதவீதம் முதியோர்கள் இருந்த நிலையில், 2050-ல்,  347 மில்லியன் மக்கள் தொகை இருக்கும் பட்சத்தில் முதியோர்களின் எண்ணிக்கை 20.8 சதவீதம் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *