
சிவபெருமான் வேடன் ரூபத்தில் அர்ஜுனனுடன் விளையாட்டாகப் போர் புரிந்தா வெள்ளியங்கிரி மலை!
ஏழுமலை என்றாலே நம் நினைவிற்கு வருவது திருப்பதி திருமலை பெருமாளின் மலை யாத்திரை தான் பலருக்கும் நினைவில் வரும். ஆனால் சைவக் கடவுளான சிவபெருமானுக்கும் ஏழுமலை கொண்ட ஒரு திருத்தலம் இருக்கிறது. அது தான் கோவை மாவட்டத்தில் இருக்கும் “வெள்ளியங்கிரி மலைக்கோவில்” இந்தக் கோவில் அமைந்துள்ளது.
வெள்ளியங்கிரி மலை சிவன் கோவில் தல வரலாறு:

வெள்ளியங்கிரி மலைமீது மற்றும் மலை அடிவாரத்தில் இருக்கும் சிவன் கோவில்கள் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்களாகக் கருதப்படுகின்றன. இங்கிருக்கும் சிவபெருமான் “வெள்ளியங்கிரி ஆண்டவர்” என்றும் அம்பாள் “மனோன்மணி” என்றும் அழைக்கப்படுகிறார்கள். பன்னெடுங்காலமாகச் சித்தர்கள் விரும்பி வழிபடும் கோவிலாக இது இருந்திருக்கிறது.


தல சிறப்பு :இயற்கை எழில் சூழ்ந்த, வனங்கள் நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலைதொடர்களில் இந்த வெள்ளியங்கிரி மலைகள் அமைந்திருக்கின்றன. இந்த மலைகளுக்கான புனித யாத்திரை மார்ச் முதல் மே மாதம் வரையான காலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. புனித யாத்திரை மேற்கொள்ளமுடியாதவர்கள் இந்த மலை அடிவார கோவிலிலேயே வழிபட்டுத் திரும்புகின்றனர்.

இந்த மலைத்தொடர்களில் ஐந்தாவது மலையான “திருநீறு” மலையில் சைவ மரபினர் நெற்றியில் அணியும் திருநீறு பாறைகளால் நிறைந்திருக்கிறது. அவற்றிலிருந்து பெறும் திருநீறை பக்தர்கள் புனித பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர். கோவை நகருக்கு நீரை அளிக்கும் நொய்யல் ஆறு இந்த மலை தொடரிலேயே உற்பத்தியாகிறது.
இந்த வெள்ளியங்கிரியில் ஒருவருக்கு அன்னதானம் அளிப்பது ஓராராயிரம் நபர்களுக்கு அன்னதானம் செய்த பலனைக் கொடுக்கிறது. இந்த ஏழாவது மலையில் பஞ்சபூத லிங்கத்திற்கு பூஜைகள் செய்து, வழிபட்டபிறகு வெள்ளியங்கிரி யாத்திரை நிறைவு பெறுகிறது.

மலையில் சிவபெருமானை தரிசித்து வணங்கி இந்த மலையிலேயே சிலகாலம் தங்குபவர்களுக்கு, சிவபெருமானுக்கு வாசிக்கப்படும் இசைக்கருவிகளின் ஒலிகள் மற்றும் ஓம்கார ஒலிகள் கேட்பதாகக் கூறுகிறார்கள்.
கோவில் அமைவிடம்:
வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூண்டி என்கிற ஊரில் அமைந்துள்ளது. கோவில் நடை திறந்திருக்கும் நேரம் : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை. மாலை 4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை. கோவில் முகவரி : வெள்ளியங்கிரி மலைக்கோவில், பூண்டி, கோயம்புத்தூர் மாவட்டம்.



