Yaroslav Hunka: வருத்தம் தெரிவித்த ட்ரூட்டோ!

Advertisements

இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜி படைப் பிரிவில் போர் புரிந்தவரை அழைத்து, கனடா நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டதற்கு கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

யரோஸ்லாவ் ஹுன்கா கௌரவிக்காப்பட்ட சம்பவம் மிகவும் வெட்கப்பட வேண்டியதும், வேதனையாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அது தவறுதலாக நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

கனடா நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி உரையாற்றினார். அப்போது நாடாளுமன்றத்தலைவர் அந்தோனி ரோட்டா இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜி படைப் பிரிவில் போர்  புரிந்த  யரோஸ்லாவ் ஹுன்கா என்பவரை அழைத்து  அறிமுகப்படுத்தினார்.

அவரைப் போர் நாயகன் என வர்ணித்ததோடு அனைவரையும் எழுந்து ந்ற்க வைத்துக் கரவொலி எழுப்பப்பட்டது. ஆனால் இதே நாஜிப் படைகள்  உத்தரவின் பேரில் தான்  முதலாவது உக்ரைன் பிரிவு சண்டையிட்டது  பின்னர் தெரிய வந்தது.

இதனால் வருத்தமுற்ற ட்ரூட்டோ, நாடாளுமன்றத்தலைவர் அந்தோனி ரோட்டா வைப்பதவி விலகுமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவரும் பதவி விலகினார்.தவறான நிகழ்ச்சி நடைபெற்றதால் தனது  வருத்தத்தைத் தெரிவித்துள்ளார் ட்ரூட்டோ,

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *