Dr. Tamilisai Soundararajan: சொந்த செலவில் மருத்துவ உபகரணங்கள்வழங்கிய ஆளுநர்!

Advertisements

10 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ்,  மருத்துவக்கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ள மாணவர்களைப் பாராட்டிச்அம்மாநில ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் தமது சொந்த செலவில் மருத்துவ புத்தகங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார். Dr. Tamilisai Soundararajan

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ்,  மருத்துவக்கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ள மாணவர்களைப் பாராட்டிச் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாணவ-மாணவிகளுக்கு தமது சொந்த செலவில் மருத்துவ புத்தகங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் ராஜீவ்வர்மா, சுகாதாரத்துறை செயலர் முத்தம்மா, துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி மற்றும் அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *