Puducherry : நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த முடிவு!

புதுச்சேரி : பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கத்தின் சார்பாக, தேசிய நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா புதுச்சேரி கரியமாணிக்கம் பகுதியில்,  நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை தலைவர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடக்கி வைத்தார். தொடர்ந்து, இயற்கை விவசாயம் செய்த விவசாயிகளை பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய செல்வம், “விவசாயிகளின் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாறிக்கொண்டிருக்கும் காரணத்தால், மக்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் குறைந்து வருகிறது எனவும், நூறு நாள் வேலையில் ஈடுபடுவோரை விவசாய வேலைக்குப் பயன்படுத்தினால் உற்பத்தி செலவை குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மேற்கூறிய முடிவு நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *