Bangaru Adigalar: ஜீவ சமாதிக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்ட எடப்பாடி பழனிசாமி!

Advertisements

பங்காரு அடிகளார் ஜீவ சமாதிக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்ட எடப்பாடி பழனிசாமி!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் ஜீவசமாதிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆன்மீக குருவுமான பங்காரு அடிகளார் கடந்த 21ம் தேதி உடல் நல குறைவால் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர், அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தற்பொழுது பங்காரு அடிகளாரின் ஜீவசமாதி கோவில் கருவறை அருகே குரு மண்டபத்தில், அமைக்கப்பட்டுள்ளது.Bangaru Adigalar

கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் பங்காரு அடிகளார் ஜீவசமாதிக்கு வந்து வழிபட்டு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி  பழனிசாமி ஜீவ சமாதிக்கு சென்று மரியாதை செய்து வழிபட்டார். இதனை அடுத்து கோவில் வளாகத்திற்குள் பஞ்ச தீபம் ஏற்றினார்.

இதனையடுத்து அடிகளார் இல்லம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். எடப்பாடி வருகை முன்னிட்டு ஏராளமான அதிமுகவினர் கோவில் வளாகத்திற்குள் கூடியிருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *