
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் வெள்ளிப் பதக்கம் வென்றார். எகிப்து தலைநகரமான கெய்ரோவில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில், ஆண்களுக்கான 25 மீட்டர் சென்டர் பயர் பிஸ்டல் பந்தயத்தில், இந்திய வீரர் குர்பிரீத் சிங் போராடி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதைத்தொடர்ந்து, உக்ரைன் வீரர் பாவ்லோ கொரோஸ்டிலோவ் தங்கப் பதக்கமும், பிரான்ஸ் வீரர் யான் பியரி லூயிஸ் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பின்னர், இந்த போட்டியின் முடிவில் இந்தியா 13 பதக்கங்களுடன் 3 ஆவது இடம் பெற்றது. சீனா 21 பதக்கங்களுடன் முதலிடமும், தென்கொரியா 14 பதக்கங்களுடன் 2 ஆவது இடமும் பிடித்தன.



