Singapore:சுற்றுப்பயணம் நிறைவு – நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

Advertisements

பிரதமர் மோடி சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லி வந்தடைந்தார்.

புதுடெல்லி:பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். நேற்றைய தினம் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வாங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது சிங்கப்பூர்-இந்தியா இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தனது சிங்கப்பூர் பயணம் குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “எனது சிங்கப்பூர் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த பயணமானது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த உதவும். சிறப்பான வரவேற்பு அளித்த சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு நன்றி” என்று பதிவிட்டார்.

மேலும் சிங்கப்பூர் பிரதமரை இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தனது சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *