உலக செஸ் சாம்பியன்ஷிப் பதிலடி கொடுத்தார் – குகேஷ்!

Advertisements

சிங்கப்பூர்:

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார்.

14 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்திருந்தது.

இந்நிலையில் நேற்று 3-வது சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் வெள்ளை காய்களுடனும், டிங் லிரென் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இதில் குகேஷ் 37-வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். 3 சுற்றுகளின் முடிவில் குகேஷ், டிங் லிரென் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் உள்ளனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *