‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு!

சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ள படம், ‘மிஸ் யூ’. என்.ராஜசேகர் இயக்கியுள்ள இந்தக் காதல் படத்தில் மாறன், பாலசரவணன், கருணாகரன், சஸ்டிகா உட்பட பலர் நடித்துள்ளனர்.

7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ள இந்தப் படம் நாளை (நவ.29) வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிட இருந்தது. ஆனால், புயல் எச்சரிக்கை காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *