Nagaland: நாகாலாந்து இந்தியாவின் மாநிலமாக இணைந்த நாள்!

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் தான்  நாகாலாந்து இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் போன்றவை நாகாலாந்து  மாநிலத்தின் எல்லைகளாகும்.

நாகாலாந்து மாநிலத் தலைநகரம் கோகிமா ஆகும். நாகாலாந்து பதினோறு நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நாகலாந்து மாநிலத்தில் 16 முக்கிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். நாகாலாந்து டிசம்பர் 1, 1961-ஆம் ஆண்டு ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது.

வரலாறு;
நாகா மக்களின் பண்டைய வரலாறு தெளிவாக இல்லை. வெவ்வேறு காலகட்டங்களில் குடியேறிய பழங்குடிகள், தற்போது வடகிழக்கு இந்தியாவாக உள்ள பகுதிகளில் குடியேறி, தங்களின் இறையாண்மை உடைய மலை நாடுகளையும் கிராமங்களையும் நிறுவியுள்ளனர். இவர்கள் வடக்கு மங்கோலியப் பகுதி, தென்கிழக்கு ஆசியா அல்லது தென்மேற்கு சீனாவிலிருந்து வந்தவர்களா என்பதற்கான எந்த பதிவும் இல்லை. நாகா என்ற பெயர் பர்மிய சொல்லான ‘நாக’ அல்லது ‘நாகா’ என்பதிலிருந்து உருவானது.
இந்தியா
நாகா மக்கள் எந்த முடியாட்சிக்கு கீழும் இல்லாமல் இறையாண்மை யொடு பல தலைமுறைகளாக இருந்து வந்தனர். ஆனால் முதல் முறையாக பிரிட்டிஷார் 1832 இல் அசாமிற்கும் மணிப்பூருக்கும் இடையே நேர்வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தபோது நாகாலாந்திற்குள் நுழைந்தனர். அவர்களை அப்போது அனைத்து நாகா கிராமங்களும் எதிர்த்தன.

பிரிட்டிஷார் நாகாலாந்தை தங்கள் ஆளுமைக்குக்கீழ் கொண்டுவர எண்ணிச் செயல்பட்டனர். அவர்களால் அவ்வளவு எளிதில் அதைச் செய்ய முடியவில்லை. 1879இல் தற்போது நாகாலாந்தின் தலைநகரமாக இருக்கும் கோகிமாவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்த போரில் பிரிட்டிஷார் நாகா மக்களை முறியடித்தனர். பின்னர் 1880 இல் அமைதிப் பேச்சுவார்த்தை வழியாக நாகாலாந்து பிரிட்டிஷாரின் ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷார் ஆட்சியின் காரணமாக, அதற்கு முன் தனித்தனி கிராமங்களாக இருந்த நாகா மக்களெல்லாம் நாகா என்ற சமூகமாகக் கருத்தப்பட்டு ஒரு அடையாளத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.  இது நாகா மக்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தியது.

கோஹிமா போர்;
1944 ஆம் ஆண்டில், நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய இராணுவம் ஜப்பானிய இராணுவத்தின் உதவியுடன் இந்தியாவின் மீது பர்மா வழியாக படையெடுத்து. அது கோகிமா வழியாக இந்தியாவை விடுவிக்க முயன்றது. மக்கள் வெளியேற்றப்பட்டனர். பிரிட்டிஷ்  இந்திய வீரர்களால் கோகிமாவின் பகுதி 1944-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷாரால் விடுவிக்கப்பட்டது. அப்போது இந்திய தேசிய ராணுவம் பாதி வீரர்களை இழந்து, பட்டினியால் பலரை இழந்ததுடன், பர்மா வழியாக வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாயினர்.

நாகா இயக்கம்;
1929 ஆம் ஆண்டில், சைமன் குழுவிடம் நாகா கிளப் (பின்னர் இது நாகா தேசிய அமைப்பானது) நாகா மக்களின் கோரிக்கை முன்வைத்தது. அதில் பிரிட்டிஷார் இந்தியாவில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் புதிய வரிகளில் இருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது, பிரிட்டிஷ் தங்களுக்கு விடுதலை அளிக்க வேண்டுமென்று எண்ணினால் தயவுகூர்ந்து தங்களை யாரின் கீழும் விட்டுவிடாமல் நாகாலாந்து பழைய காலங்களில் எப்படி இருந்ததோ அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். என கோரினர்.

1929 முதல் 1935 வரையான காலப்பகுதியில், நாகா மக்களின் இறையாண்மைப் புரிதல் என்பது பாரம்பரிய பிராந்திய வரையறை அடிப்படையில் ‘சுய-ஆட்சி’ ஆகும். 1935 முதல் 1945 வரையான காலப்பகுதியில், நாகர்கள் அசாமில் மட்டுமே தன்னாட்சி உரிமையைக் கோரியிருந்தனர்.

வேண்டுகோள்;
1946 ஆகஸ்டு முதல் நாள், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான நேரு, நாகா மக்கள் இந்திய ஒன்றியத்தில் சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உள்ளூர் தன்னாட்சி உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை நிர்வாகத்தின் பரந்த பகுதியினருக்கு வழங்கப்படும் என்றார். 1946 க்குப் பிறகு நாகர்கள் தங்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு தனி நாடாகவும் சுதந்திரமாக வாழ தங்களுக்குள்ள முழு உரிமைக்காகவும் வலியுறுத்தினர்.

1947 ஜுலை 19, இல் இந்திய விடுதலைக்கு முன்னர் நாகா தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் டெல்லியில் காந்தியைச் சந்தித்தனர். அவர்களுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்திய காந்தி, “இந்திய ஒன்றியத்துடன் இணைய விரும்பவில்லை என்றால், சுதந்திரமாக இருப்பதற்கு நாகாலாந்திற்கு அனைத்து உரிமையும் உண்டு” என்று உறுதியளித்தார். அதன்படி நாகாலாந்து 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு -14- ஆம் தேதி சுதந்திரத்தை அறிவித்தது.

இதை இந்திய ஒன்றிய அரசு எதிர்த்தது. நாகா மக்களின் ஒருமித்த கருத்தை இந்தியாவிற்குத் தெரிவிக்க, பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்கப்பட்டது. அது பொருட்படுத்தப்படாததால் 1951-ஆம் ஆண்டு மே 1-இல் பொது வாக்கெடுப்பு நடத்தி அந்த வாக்குச்சீட்டுகளை ஒன்றிணைத்து, 80 பவுண்ட் கொண்ட ஒரு புத்தகமாக இந்தியக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார்கள். 1952-ஆம் ஆண்டில் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது நாகாலாந்து மக்கள் அதனை முழுமையாகப் புறக்கணித்தனர்.

1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாகலாந்து அசாம் மாகாணத்தின் பகுதியாக ஆக்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்களின் ஒரு பிரிவினரிடையே தேசியவாத நடவடிக்கைகள் உருவாயின. இந்த இயக்கமானது தொடர்ந்த வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்தது, இந்திய  அரசு 1955 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தை அனுப்பியது. 1957ஆம் ஆண்டில் நாகா தலைவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி நாகா மலைகளைக் கொண்டு ஒரு தனி பகுதியை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது.

1960-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நேரு மற்றும் நாகா மக்கள் மாநாட்டு தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர், 16- அம்ச ஒப்பந்தம் உருவானது. இதன்படி, நாகாலாந்தை இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட முழுமையான மாநிலமாக இந்திய அரசு அங்கீகரித்தது. இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சத்தின்படி நாகாலாந்து இந்திய வெளியுறவுத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. வருமான வரிவிலக்கு போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். இந்த 16 அம்ச ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு ‘Article371A’’ உருவாக்கப்பட்டது.
சட்டம்;
1961-ஆம் ஆண்டு நாகலாந்து மாநில சட்டம் உருவானது. 1963ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி இடைக்காலக் கால அமைப்பு கலைக்கப்பட்டு நாகலாந்து மாநிலமானது முறையாக உருவாக்கப்பட்டது 1963-ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று கோகிமாவானது மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த தேர்தல்களுக்குப் பிறகு, 1964 ஜனவரி 11, அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாகாலாந்து சட்டமன்றம் அமைக்கப்பட்டது.

அரசியல்;
நாகாலாந்து சட்டமன்றத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஏனைய மாநிலங்களைப் போலவே, முதல்வரே அரசின் தலைவராக இருப்பார். இந்த மாநிலம் முழுவதும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *