
கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும்போது ஓயாமல் அழுது கொண்டு இருந்த குழந்தையைக் கள்ளக்காதலன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மல்லபுரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் சாமி (27). இவரும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா (24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இருவீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் இருவரும் வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்து கொண்டனர். இதில் பிரியாவுக்கு 3 வயதில் ஒரு மகளும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆனால், ஸ்டீபனுக்கு குழந்தைகள் இல்லை.
இருவரும் வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்து கொண்டாலும் இவர்களது முதல் காதலை மறக்க முடியாமல் இருந்து வந்துள்ளனர். ஆகையால் பிரியாவும், ஸ்டீபனும் செல்போனில் பேசத் தொடங்கியதை அடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்தது. இதனால், கணவரிடம் தொடர்ந்து சண்டை போட்ட பிரியா மகளை மட்டும் கணவரிடம் விட்டுவிட்டு ஒன்றரை வயது ஆண் குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு ஸ்டீபனுடன் சென்றுவிட்டார். ஸ்டீபனும் தனது மனைவியைப் பிரிந்து பிரியாவுடன் திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில், உல்லாசமாக இருக்கும் போதெல்லாம் குழந்தை ஓயாமல் அழுது கொண்ட இருந்துள்ளது. இதனால் ஸ்டீபன் குழந்தைமீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் உல்லாசமாக இருக்கும்போது பசியால் குழந்தை அழுதுள்ளது. இதனால், கடும் கோபம் அடைந்த ஸ்டீபன் அந்தக் குழந்தையைத் தூக்கி தலையைச் சுவரில் ஓங்கி அடித்துக் காலால் குழந்தையின் முகத்தில் மிதித்தும் கொன்றுள்ளார்.
இதனையடுத்து இருவரும் ஸ்டீபனும், பிரியாவும், குழந்தை பாத்ரூமில் வழுக்கி விழுந்து மயக்கம் அடைந்ததாக நாடகமாடி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தை மரணத்தில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் தலையில் காயம் இருப்பதுதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையைக் கொலை செய்து விட்டு நாடகமாடிய கள்ளக்காதல் ஜோடியான ஸ்டீபனையும், பிரியாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

