
நாளையத் தீர்ப்பு முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா தாக்கல் செய்த மனு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்கு சங்கீதா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் தவெகவினர் ஆட்டம் பாட்டம் என உற்சாகம் அடைந்துள்ளனர். ஏனென்றால் விஜய்யின் விவாகரத்து வழக்கு தவெகவினருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அதுவும் சரியாகிவிட்டதாக பேசி வருகின்றனர்.
இருப்பினும் தவெகவினருக்கு இன்னொரு பெரும் கவலையும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை த்ரிஷா முதல்வர் விஜய்யின் நெருங்கிய வட்டத்தில் இருந்து வருகிறார். முதல்வர் விஜய் பதவியேற்பு விழா தொடங்கி அவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் வரை த்ரிஷாவின் செயல்பாடுகள் தவெகவினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இதனிடையே நடிகை த்ரிஷா நேரடி அரசியலில் களமிறங்கக் கூடும் என்று தவெகவினர் மத்தியில் அலசல்புடசல் பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே மதுரையில் மதுரையில் “திரிஷா நற்பணி மன்றம்” என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த போஸ்டரை அடித்திருப்பதும்கூட தவெக தொண்டர்கள் தான். அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா பாணியில் த்ரிஷாவும் சில கோயில்களுக்கு யானை கொடுத்து வருகிறார். ஏற்கனவே அரசியலில் ஆர்வம் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். தற்போது தமிழக அரசியலில் த்ரிஷாவின் பெயரும் அதிகமாகவே உச்சரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக த்ரிஷா தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையக் கூடும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் முதல்வர் விஜய்யும் தன்னுடன் இருந்த பல்வேறு நபர்களுக்கும் அரசியலில் முக்கியத்துவம் கொடுத்து பொறுப்பு அளித்து வருகிறார். இதனால் த்ரிஷாவுக்கும் நிச்சயமாக பொறுப்பு அளிப்பார் என்பதே தவெகவினரின் கணக்காக இருக்கிறது.




