
பண்ருட்டி அருகே திமுக கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் படுகாயம்…
கடலூர் மாவட்டம் நெய்வேலி திமுக சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் கட்சி நிர்வாகிகள் சுவர் விளம்பரம் மற்றும் திமுக கொடியினை பல்வேறு இடங்களில் சாலையில் நட்டு வருகின்றன.
இதற்கான பணிகளைத் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சீனத்து என்பவருடன் சுமார் 12 பேர்கள் குழுவாக வந்து ஒப்பந்த பணியாளராகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கடலூர் சாலையில் திமுக கட்சிக்கொடியை நடும்பொழுது சாலையில் ஓரமாக இருந்த மின்மாற்றியில் திமுக கொடி கம்பம் பட்டதில் 28 வயதான அருண் குமார் மின்சாரம் தாக்கிப் படுகாயம் அடைந்தார்.
இதனைப் பார்த்தவர்கள் உடனே மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


