Glass Bridge: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

Advertisements

கண்ணாடிப் பாலம்

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
நம்ம கேரளாவில் கண்ணாடிப் பாலம் வந்திருக்கம்மா…

கேரளாவின் இடுக்கி மாவட்டம் பிக்சர்ஸ்க் மலைப் பிரதேசத்தில் நீளமான கண்ணாடிபாலம் அமைக்கபட்டுள்ளது.

இது இந்தியாவின் மிக நீளமான பாலமாகும். இந்த்ப் பாலம் கோலாஹலமேடு பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் எழில் கொஞ்சும் மாநிலங்ளில் கேரளா முன்னிலை வகிக்கிறது. அப்படி அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் இந்தியாவின் மிக நீளமான பாலம் கேரளாவில் அதுவும் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது.

கேரளாவின் இயற்கை அழகை கண்டு ரசிக்க நல்லதொரு வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது. சுற்றுலாபயனிகள் கண்டு ரசிக்கலாம். மிக நீண்ட தூரத்தில் இருக்கும் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

முதல் நாளே ஏராளமான பயணீகள் வருகை தந்திருந்தனர். இதன் நீளம் 40 மீட்டர். ஜெர்மெனியிலிருந்து இறக்குமதி செய்யபட்ட கண்ணாடியால் செய்யப்பட்டது. 35 டன் எடையுள்ளது.

இந்தக் கண்ணாடி பாலம் கட்டுவத்ற்கு 3 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 15 பார்வையாளர்கள் இப்பாலத்தின் மீது நின்று கண்டு ரசிக்கலாம்….
500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணம் அனைவருக்கும் பொருந்தும். 10 நிமிடங்கள் மட்டுமே நின்று பார்க்க வேண்டும்.

இதன் மீது நிற்பதும் நடப்பதுமே ஒரு வித திகிலூட்டும் த்ரில்லிங்கான அனுபவமாக இருக்கும். பாலத்தின் விளிம்பில் நிற்கும்போது தலை சுற்றுவது போலவும் கடலில் விழுந்து விடுவது போலவும் நம்மை ஆடச் செய்து விடும்.

சரி பாலம்பற்றிப் பார்க்கலாம்:

இது கண்ட்லீவர் பாலம் என்று அழைக்கடுகிரது. இப்பாலம் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உள்ளதால் விண்ணுக்கு அருகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவது சிறப்பு.

இனி சீனா, துபாய் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இடுக்கி போலாம்… இயற்கையை ரசிக்கலாம்.
மலையாளக் கடலோரம் … மயக்கும் கண்ணாடிப் பாலம்…
இடுக்கியிலே இருக்குது …இப்பவே போலாம் வாங்க!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *