கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு..!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையினால், கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய இடங்களில் விடிய விடிய அதிகளவில் மழை பெய்ததால், வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், வாக ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதையடுத்து, சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *