
இலங்கையில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்தியா மற்றும் இலங்கையில் 13 ஆவது பெண்கள் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதன் 6 ஆவது லீக் ஆட்டம் இலங்கையில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில், முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்கள் சேர்த்தது.
இந்திய மகளிர் அணியின் தரப்பில் அதிகபட்சமாக ஹெர்லின் 46 ரன்களும் ரீச்சா கோஷ் 35 ரன்களும் குவித்தனர். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தான் அணி படுதோல்வியடைந்தது.
இதனால், இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




