சென்னை: திமுக ஆட்சி வழங்கிய இட ஒதுக்கீடுகளின் மூலம் தமிழக நிர்வாக ஆளுமையில் பெண்கள் உள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலயப் புரட்சி. திமுக ஆட்சி வழங்கிய இட ஒதுக்கீடுகளின் மூலம் தமிழக நிர்வாக ஆளுமையில் பெண்கள் உள்ளனர். 38 மாவட்டங்களில் 16 மாவட்ட கலெக்டர்கள் பெண்கள். உள்துறை, வீட்டு வசதித்துறை, பிற்படுத்தப்பட்டேரர் நலத்துறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் செயலாளர்கள் பெண்கள் தான்.
உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் முதலான பதவிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் உள்ளனர். மருத்துவ மனைகளுக்குள் சென்றால் இணையாகப் பெண் டாக்டர்கள் உள்ளனர். நீதிமன்றங்களுக்குச் சென்று பார்த்தால் அங்கும் பெண்கள் பலர் நீதிபதிகளாக உள்ளனர்.
3 சதவீதம் சொன்னதைச் செய்யும் தி.மு.க. என்று மக்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. பா.ஜ., ஆட்சியில் இட ஒதுக்கீடு தத்துவத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் கேபினட் அமைச்சகத்தில் வெறும் 3 சதவீதம் அளவுக்கே இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். இனியும் பா.ஜ, ஆட்சி தொடர்ந்தால் இட ஒதுக்கீடுகள் மத்திய அரசில் மட்டுமல்ல, மாநில அரசுகளில் கூட நடைமுறைப்படுத்தப்படாத நிலை ஏற்படும்.
நாடும் நாமே நாற்பதும் நாமே பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகிவிடும். அந்த நிலையை இப்போதே முயன்று தடுத்திடல் வேண்டும். பா.ஜ., ஆட்சி மத்தியில் அமையாமல் தடுத்து இண்டியா கூட்டணி ஆட்சி அமைய ஒவ்வொருவரும், குறிப்பாகப் பெண்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டாக வேண்டிய தருணமிது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி இதைத் தவறவிட்டால், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்ற அவல நிலை தான் உருவாகும். மாநிலங்களின் ஆட்சி என்பதே இல்லாமல் போய்விடும். விழிப்புடன் இருப்போம். இண்டியா கூட்டணி ஆட்சியை அமைப்போம். நாடும் நாமே நாற்பதும் நாமே என்ற நிலையை உருவாக்குவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
