ஜன நாயகன் படத்திற்கு சீமான் சொன்ன கருத்து.!

ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழை தடைசெய்யும் அளவிற்குப் படத்தில் ஒன்றும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் இருப்பது கஷ்டமாக இருந்தால் தனியாகச் சென்று நிற்க வேண்டியது தானே என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், கூடுதல் தொகுதி கேட்டு பேரம் செய்ய வாய்ப்பு இருக்குமே தவிர வெளியே வரமாட்டார்கள் என விமர்சித்தார். இதையடுத்து, திமுக தேர்தல் வருவதால் பொங்கல் தொகை அறிவித்து உள்ளார்கள். ஆனால், ஏற்கனவே கடன் இருக்கும் போது 7 ஆயிரம் கோடி ரூபாய் செல்விடுவது முட்டாள் தனம் என்று கூறினார்.
பின்னர், பாஜகவின் ஜாதி, மத அரசியல் தமிழகத்தில் எடுபாடாது என்றார். தொடர்ந்து, பேசிய அவர் ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழை தடைசெய்யும் அளவிற்குப் படத்தில் ஒன்றும் இல்லை எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *