உக்ரைன் – ரஷ்யா போர் உடனடியாக முடிய வேண்டும் : டொனால்ட் டிரம்ப் கெடுபிடி.!

உக்ரைனுடனான போர் நிச்சயம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ரஷ்யாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். உக்ரைனுடனான போரின் காரணமாக, ரஷ்யா தனது டீசல் எண்ணெய் துறையின் மீதான கட்டுப்பாட்டைத் துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் பல டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் தகர்க்கப்பட்டு, குறைந்தது தற்காலிகமாக கூட செயல்பாட்டில் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுடனான இந்த அபத்தமான மற்றும் முடிவே இல்லாத போர் நிச்சயம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் போரினால் மாதந்தோறும் 25 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகக் கூறியுள்ளார். அவர்களில் பெரும்பாலோர் வீரர்கள் கொல்லப்படுவதால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *