
ஆவடி: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பூந்தமல்லி பஸ்நிலையத்தில், காவல் உதவி செயலியின் பயன்பாடுகுறித்து மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்து கொண்டு, பெண்களிடையே காவல் உதவி செயலிபற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட காவல் உதவி செயலியைப் பயன்படுத்த வேண்டும் எனவும், அதன் பயன்பாடுகுறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
