Durai Murugan: போட்டியிட விரும்புவோர்கள் வரும் 19 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

Advertisements

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிட விரும்புவோர்கள் வருகிற 19 ஆம் தேதி முதல் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் 50ஆயிரம் என நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், மார்ச் மாதம் மத்தியில் தேர்தில் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்துவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவருகிறது. திமுகவை பொறுத்தவரை தங்களது கூட்டணி கட்சியோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கவுள்ளது. இந்தநிலையில் திமுக சார்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 19-2-2024 முதல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்  போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி செய்து, 1-3-2024 முதல் 7-3-2024 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம்  50,000/- எனவும், விண்ணப்ப படிவத்தைத் தலைமைக் கழகத்தில் ரூ.2,000/-வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாமெனக் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *