முதல் டெல்லி பயணம் – விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு என்ன?

“தமிழகத்தில் 108 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க.வின் முதலமைச்சராக விஜய் கடந்த மே 9-ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் அரசுமுறைப் பயணமாக அவர் நாளை டெல்லி செல்கிறார்.

 

இந்தப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் விஜய், தமிழகத்தின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த உள்ளார். மேலும், ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியைச் சந்திக்கும் இந்த நிகழ்வு, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *