மோடியுடன் விரைவில் பேச உள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

பிரதமர் நரேந்திர மோடியுடன் விரைவில் பேச உள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியாவுக்கு எதிராகக் கூடுதல் 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

இதனால் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.  இந்த வரி விதிப்பால் இந்தியா அமெரிக்கா வர்த்தக உறவுக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் விரைவில் பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் இருநாடுகளுக்கு இடையேயன வார்த்தக விவகாரம் தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன என்றார்.

மேலும், வரும் வாரங்களில் பிரதமர் மோடியுடன் பேசுவதை எதிர்நோக்கியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *