ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தச் சம்பவம் நாடுகளிடையேப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன், ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியேச் சந்தித்துப் பேசினார். ஆனாலும், உக்ரைன் மீதானத் தாக்குதலை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

பின்னர், உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள யாரோவாக் கிராமம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர், ரஷ்யாவைக் கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கைத் தேவை என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *