போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் தாக்கும் – இஸ்ரேல் பிரதமர்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காசவில் தற்போதைக்கு போரை நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.

போர் தொடங்கி கிட்டத்தட்ட 14 மாதங்கள் நிறைவுற்ற நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “நாங்கள் இப்போது போரை நிறுத்தினால், ஹமாஸ் மீண்டும் வந்து தாக்கலாம் – இது நடப்பதை நாங்கள் விரும்பவில்லை,” என்று கூறினார்.

எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க “ஹமாஸ்-ஐ அழித்தொழித்தல், அதன் இராணுவ மற்றும் நிர்வாகத் திறன்களை ஒழித்தல்” என்ற இலக்கை நிர்ணயித்து இருப்பதாக நேதன்யாகு மீண்டும் கூறினார். எனினும், இந்த இலக்கை நாங்கள் இன்னும் முழுமையாக அடையவில்லை என்று கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கடந்த அக்டோபர் 23-ந்தேதி கூறும்போது, “இஸ்ரேல் ஹமாஸ்-இன் ராணுவத் திறனைச் சிதைக்க முடிந்தது. அதன் தலைமையை அடுத்தடுத்து கொன்று குவித்தது. அந்த வெற்றிகளுடன், பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று, அடுத்து என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொண்டு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *