
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பயிலரங்கை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடக்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளோரில் பெரும்பாலானோர் புதியவர்கள். இதனால் அவர்களுக்குச் சட்டப்பேரவை விதிமுறைகள், நடைமுறைகள் குறித்துப் பயிற்சி அளிக்கும் வகையில் இன்றும் நாளையும் இரண்டு நாள் பயிலரங்கு நடைபெறுகிறது.
கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்தப் புத்தாக்கப் பயிற்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குத்து விளக்கேற்றித் தொடக்கி வைத்தார். இதில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், பேரவைச் செயலாளர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பதினேழாவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் உரையுடன் ஜூன் 18ஆம் நாள் தொடங்க உள்ளது. அதை முன்னிட்டுச் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



