பாகிஸ்தானை அழிப்போம் – இந்திய இராணுவம் எச்சரிக்கை.!

பாகிஸ்தானை உலக வரைபடத்தில் இருந்தே அழிப்போம் என இந்திய இராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜஸ்தானில் அனுப்கர் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில், இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி உரையாற்றினார். அப்போது அவர், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை நிறுத்த வேண்டும் இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் இரண்டாம் பாகம் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த முறை ஆபரேஷன் சிந்தூர் 1.0 போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம் என கூறினார். தொடர்ந்து அவர், பயங்கரவாத ஆதரவை நிறுத்தவில்லையெனில் பாகிஸ்தானை உலக வரைபடத்தில் இருந்தே அழிப்போம் என்றார். இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் 2.0 குறித்து திவேதி கவனம் பெற்றுள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *