
பாஜக-வுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக என முதலமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.
இராமநாதபுரத்தில், முடிவுற்ற நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன் என்று, கீழடி அருங்காட்சியகத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
அப்போது அவர் பேசிய போது, அதிமுக, பாஜக-வுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது என தெரிவித்தார்.
பின்னர், தமிழர்களின் மீது அக்கறை கொண்ட யாரும் பாஜக – வுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் என கோபமாக கூறினார் . தொடர்ந்து அதிமுக, தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்களுக்குத் துணைபோகும் கொள்கையற்ற கூட்டத்துடன் இணைந்துள்ளது என தெரிவித்தார்.


