போரை நிறுத்தாவிட்டால் நரக கொடுமையை ஹமாஸ் அமைப்பு அனுபவிக்கும் – டிரம்ப்

அமைதி ஒப்பந்தத்தை ஏற்கவேண்டும் இல்லையெனில் ஒருவரும் பார்த்திராத நரக கொடுமையை ஹமாஸ் அமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிகை விடுத்துள்ளார்.

இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்புடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை முன்வைத்தார்.

இதற்கு நேதன்யாகு சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில், அதிபர் டிரம்ப் ட்ரூத் சோசியல் பக்கத்தில், ஹமாஸ் அமைப்பு அமெரிக்க நேரத்தின்படி ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும்.

இந்த இறுதி வாய்ப்புக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லையெனில், இதற்கு முன் ஒருவரும் பார்த்திராத நரக கொடுமையை ஹமாஸ் அமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பதிவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *