Advertisements

காலம் காலமாக திமுகவை ஆதரித்து வந்த அரசு ஊழியர்கள் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தை ஆதரிக்கலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது .
கடந்த தேர்தல் சமயத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் குறித்தும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் அறிவிக்கப்பட்டிருந்தது .
ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை கடந்த பிறகும் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை பழைய ஓய்வூதிய திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை .
இது தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன .
.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள் சத்துணவு ஊழியர்கள் மின்வாரிய ஊழியர்கள் ரேஷன் ஊழியர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் என பல்வேறு தரப்பு ஊழியர்களும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது .
பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரையில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் சுகந்திப் சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் தன்னுடைய அறிக்கையை முழுமையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இது வெறும் கண்துடைப்புதான் ஏற்கனவே இது போன்று இரண்டு முறை குழே அமைக்கப்பட்டு எதுவும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது ..
தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 331 பேர் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருக்கிறார்கள். 6 லட்சத்து 24 ஆயிரத்து 140 பேர் புதிய ஓய்வு திட்டத்தில் இருக்கிறார்கள் ..
இவர்கள் அனைவரும் தற்பொழுது திமுகவுக்கு எதிராக கொடி பிடித்து வருகிறார்கள் . இது மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் 10 லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் இருக்கிறார்கள் .
காலம் காலமாக இவர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்து வந்தார்கள். குறிப்பாக கலைஞர் கருணாநிதிக்கு ஆதரவாளர்களாகவே இவர்கள் தொடர்ந்து வாக்களித்து வந்தார்கள் . இந்த நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு எதிராக இந்த முறை அரசு ஊழியர்கள் வாக்களிக்கலாம் என தெரிகிறது .
இதற்கிடையே அரசு ஊழியர்களுக்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் மதுரையில் நடந்த மாநாட்டின் போது அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்கவில்லை என குறிப்பிட்டார் . இதனால் அரசு ஊழியர்களின் பெரும்பாலான ஓட்டு விஜய் கட்சிக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த நிலையில் சூழ்நிலையை சமாளித்து அரசு ஊழியர்களை தங்கள் பக்கம் இழேப்பதற்காக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரலாம் என திமுக அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது . இது குறித்து அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளிவந்தாலும் வரலாம் என்பது தற்பொழுது சந்தேக செய்தியாக பார்க்கப்படுகிறது.
Advertisements


